திருச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் இல்லை – முக்கொம்பில் மாவட்ட ஆட்சியர் பேட்டி!

0 577
Stalin trichy visit

காவேரியில் நீர் வரத்து அதிகம் இருப்பதன் காரணமாக திருச்சி முக்கொம்பு மேலணை கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

 

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கன மழையானது தொடர்ந்து பெய்து வருகிறது.இதனால் மேட்டூர் அணையானது நிரம்பி வருகிறது.விரைவில் முழு கொள்ளளவை எட்ட உள்ளது.அதன் காரணமாகவும் காவேரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு கருதி முக்கொம்பு மேலணையிலிருந்து கொள்ளிடம் ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

 

கொள்ளிடம் பழைய கதவனையிலிருந்து 32 மதகுகள் மூலம் 10 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது, புதிய தவணையில் 45 மதங்களும் முழுவதுமாக திறக்கப்பட்டுள்ளது.

நீர்வள ஆதாரத்துறை நடுக்காவிரி வடிநில வட்டம் கண்காணிப்பு பொறியாளர் திருவேட்டை செல்வன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், முக்கொம்பு உதவி பொறியாளர் ஆறுமுகம் உள்ளிட்ட அதிகாரிகள் திறந்து வைத்தனர்.

 

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சிவராசு அந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

மேட்டூரிலிருந்து 32 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. பவானி,அமராவது,நொய்யல் ஆகியவற்றிலிருந்து 10 ஆயிரம் கன அடி வருகிறது.நாளை மேட்டூரில் தண்ணீர் திறக்க கூடிய சூழல் உள்ளது.எனவே தான் காவேரியில் இருக்க கூடிய 15 ஆயிரம் கன அடியில் 10 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது.

 

கோரையாறு,குடமுருட்டி ஆகிய வாய்க்கால்களில் அதிகப்படியாக வரும் தண்ணீரை எளிதாக குறைக்க காவேரியில் திறக்கப்படும் அளவு குறைக்கப்பட்டு கொள்ளிடத்தில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்படுகிறது.

 

திருச்சி மாவட்டத்தில் வெள்ள அபாயம் இல்லை.

வெள்ள அபாயத்தை தடுப்பதோடு மாவட்டத்தில் உள்ள வாய்க்கால்களின் நீர் அளவை குறைக்கவே தற்போது கொள்ளிடத்தில் நீர் திறக்கப்பட்டுள்ளது.

காவேரியில் தண்ணீர் திறந்து விட்டால் அந்த நீர் டெல்டா மாவட்டங்களுக்கு செல்லும்.அங்கு மழைப்பொழிவு அதிகம் இருக்கிறது.அதனால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்க கூடிய நிலை ஏற்படும் எனவே தான் கொள்ளிடத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது.

திருச்சி மாநகரில் தண்ணீர் செல்லக்கூடிய வழிகளில் ஆக்கிரமிப்பு அதிகம் இருக்க கூடிய காரணத்தால் தான் சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்தது.விரைவில் அந்த பகுதியில ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் நடைபெறும். தாழ்வான பகுதிகளில் சூழ்ந்துள்ள மழை நீர் இன்னும் 24 மணி நேரத்தில் வடிந்து விடும்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 154 குளங்களில் 87 குளங்கள் 75 சதவீதத்துற்கு மேல்

நேற்று வரை நிரம்பி உள்ளன.பஞ்சாயத்து கட்டுப்பாட்டில் உள்ள 1251 குளங்களில் 60 சதவீத குளங்கள் நிரம்பி உள்ளன.

இன்று காலை கோரையாற்றில் 5000 கன அடி தண்ணீர் வந்தது. நாளைக்குள் அது நிச்சயம் 2500 கன அடியாக குறைந்து விடும்” என்றார்.

Leave A Reply

Your email address will not be published.