முசிறியில் சாலை விபத்தில் ஒருவர் பலி
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் சோளம்பட்டியைச் சேர்ந்தவர் கோபிநாத் (25). இவர் அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர் மணிகண்டன் ( 38 ) என்பவரை தனது இருசக்கர வாகனத்தில் அமர வைத்து சொந்த வேலையாக முசிறிக்கு வந்துள்ளார். வேலையை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது முசிறி தாபேட்டை சாலையில் மேட்டுப்பட்டி பவர் ஆபீஸ் அருகே வந்த போது வாகனம் கோபிநாத் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது இதில் கோபிநாத் மற்றும் மணிகண்டன் படு காயமடைந்தனர். இருவரும் முசிறி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோபிநாத் பலியானார். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.