ஊராட்சி உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்க கூட்டம்

0 334
Stalin trichy visit

AITUC ஊராட்சி உள்ளாட்சி தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு சங்கம் மணிகண்டம் ஒன்றிய அமைப்பு பேரவை   கூட்டம் நேற்று (25.6.2023) மாலை 4:50 மணி அளவில் சோமரசம்பேட்டையில் உள்ள ஏஜடியுசி தலைமை அலுவலகத்தில் நதியா தலைமையில் நடைபெற்றது பேரவை கூட்டத்தில் துவக்கி வைத்து புதிய நிர்வாகிகளை முன்மொழிந்து AITUC மாவட்ட துணைத் தலைவர் C செல்வகுமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார் புதிய நிர்வாகிகள் ஒன்றிய தலைவராக  MR முருகன் ஒன்றிய செயலாளராக  J நதியா, ஒன்றிய பொருளாளராக  பாப்பாத்தி, ஒன்றிய துணைத் தலைவர்கள்  ஜெயபால்,  சரோஜா ஒன்றிய துணைச் செயலாளர்கள் தனம்,  கனிமொழி, ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்கள்  ஜெயச்சந்திரன், நிர்மலா தேவி, ரூபா , இலஞ்சியம் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் முத்தழகு, சாந்தி, பொன்னம்மாள், இளஞ்சியம், சித்ரா ஆகியோர்களை ஏக மனதுடன் தேர்வு செய்யப்பட்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி ஏஜடியுசி உள்ளாட்சி சங்க மாவட்ட துணை செயலாளர் MR முருகன்  உரையாற்றினார் தமிழ்நாடு ஏஜடியுசி கட்டடத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத்தலைவர்  S முத்தழகு பெண்கள் சங்க மாநிலத் துணை ஒருங்கிணைப்பாளர்  M மருதம்பாள் தரைகடை சங்க ஒன்றிய செயலாளர்  K மேகராஜ்   மற்றும் பல்வேறு பஞ்சாயத்தில் இருந்து தூய்மைய் பணியாளர்கள் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு

கூட்டத்தில் கீழ்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன

அந்தந்த பஞ்சாயத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களை பஞ்சாயத்து நிர்வாகமாக தமிழக அரசு அறிவிக்கக் கோரியும்

அடிப்படை சம்பளம் ரூபாய் 21,000மாக தமிழக அரசு உயர்த்தி வழங்க கோரியும்

கொரோனா காலத்தில் பணிபுரிந்த அனைத்து தூய்மைப் பணியாளர்களுக்கும் தமிழக அரசு அறிவித்த ஊக்கத்தொகை ரூபாய் 15 ஆயிரத்தை உடனே வழங்க கோரி

மாதமாதம் வழங்கக்கூடிய சம்பளத்தை ஒரே தேதியில் நிரந்தரமாக வழங்க கோரி

சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் அவர்கள் தூய்மைப் பணியாளர்களுக்கு அறிவித்த 3600ல் இருந்து 5000 ஆக சம்பளம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்ததை உடனே தமிழக முதல்வர் வழங்க கோரி

கூட்ட முடிவில் புதிய ஒன்றிய பொருளாளர் பாப்பாத்தி நன்றி கூறினார்

Leave A Reply

Your email address will not be published.