வினாடி வினா தேர்வில் தேர்ச்சி; பள்ளி மாணவிக்கு துபாய் சுற்றுலா செல்லும் வாய்ப்பு

0 624
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோட்டாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி தர்ஷினி. இவர் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறார். மேலும் 2020–2021ம் வருடம் நடைபெற்ற ஊரக திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று வருடத்திற்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை பெற்று வருகிறார். இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறை மூலம் இவ்வாண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வார இறுதி நாட்களில் அடிப்படை வினாடி வினா தேர்வு நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொண்ட மாணவி தர்ஷினி திருச்சி பாலக்கரையில் உள்ள சையது முர்துசா அரசு மேல்நிலைப்பள்ளியில் இத்தேர்வை எழுதினார். தமிழகம் முழுவதும் இத்தேர்வில் 89 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் தர்ஷினியும் ஒருவர் ஆவார். இந்தத் தேர்வில் வெற்றி பெற்ற தர்சினிக்கு துபாய் சுற்றுலா செல்லும் வாய்ப்பை பள்ளிக் கல்வித்துறை வழங்கியுள்ளது. இது பற்றி மாணவி தர்ஷினி கூறியபோது இந்த அடிப்படை வினாடி வினா தேர்வில் நான் கலந்துகொள்ள என்னை ஊக்கப்படுத்திய என்னுடைய வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் பெற்றோர்கள் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.