தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி நகரியம் இயக்கலும் பராமரித்தலும் செயற்பொறியாளர் பிரகாசம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருச்சி நகரியம் கோட்டம் சிந்தாமணி பிரிவுக்குட்பட்ட உறையூர் பகுதியில் உள்ள சாலைரோடு, சுபானியாபுரம், உறையூர் ஹவுசிங் யூனிட், வெட்டுக்குழித்தெரு, புதுகாலனி ஆகிய பகுதிகளில் உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட இருப்பதால் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.