25 பதக்கங்களை வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
மாநில அளவிலான சிலம்ப போட்டி கோவையில் நடந்தது. இதில் திருச்சியை சேர்ந்த காவலர் அரவிந்த் தலைமையில் 25 வீரர்- வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகளின் முடிவில் ஆண்கள் பிரிவில் கார்த்திகேயன், பிரதனேஷ், அக்கேஸ்வரன், திலீபன் ஆகியோர் முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றனர்.
அரிஹரசுதன், இளஞ்சீரியன், ஸ்ரீமான்ஹரி மற்றும் ரோஷன் வெள்ளிப்பதக்கமும், சிவபிரியன், சரனேஸ், நிகில், தருண் ஆகியோர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர். பெண்கள் பிரிவில் சுமித்ரா, பிரதித்தா, எஸ்வந்த்தினி தங்கப்பதக்கமும், வினோ தீபா, நித்திய தர்ஷினி மற்றும் ஹர்ஷினி வெள்ளியும், சஞ்சனாஸ்ரீ, அபிராமி, சகானா, ஜெயஸ்ரீ, அனிஷ்கா, கிரிஷா மற்றும் திவ்யஸ்ரீ வெண்கலப்பதக்கமும் வென்றனர். 25 பதக்கங்களை வென்று திருச்சி திரும்பிய வீரர்-வீராங்கனைகளுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.