கார் மோதியதில் நடந்து சென்ற விவசாயி உயிரிழப்பு
திருச்சி, ஏப்.18 திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சேசலூரைச் சேர்ந்தவர் சடையன் (50). விவசாயியான இவர் தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டு சேசலூர் அருகே நடந்து சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த சிறப்பு நிற கார் சடையன் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டதை அடுத்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மணப்பாறை அருகே காரை நிறுத்தி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சிசிடிவி காட்சிகள் உள்ளது.