“கோடை மழையை பயன்படுத்தி உழவு செய்வதால் நில வளத்தை பெருக்க முடியும்” விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்!

0 284
Stalin trichy visit

தமிழகத்தில் ஒரு ஆண்டில் மழை அளவான 960 மில்லி மீட்டரில் 8-ல் ஒரு பங்கு மழை கோடைகாலத்தில் பெய்கிறது. சாகுபடிக்கு பிறகு தரிசாக உள்ள நிலப்பகுதி கடினமாக இருக்கும். இந்த நிலத்தில் கோடை மழையை பயன்படுத்தி நன்கு உழவு செய்தால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொல, பொலவென ஆகிவிடும். இதனால் மண்ணுக்குள் காற்றோட்டமும், மண்ணிலுள்ள நுண்ணுயிர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். நோய் மற்றும் பூச்சிகளை பரப்பும் காரணியான களைச்செடிகள் அளிக்கப்பட்டு மண்ணில் மக்கி உரம் ஆகிவிடுவதால் களைகளின் தாக்குதல்

குறைந்துவிடும். மண்ணுக்குள் இருக்கும் பூச்சிகள் கூட்டுப்புழுக்கள் நிலத்தின் மேலே கொண்டு வரப்பட்டு பறவைக்கு உணவாகிவிடும். மேலும் நீர் ஊடுருவிச் செல்வதற்கான தன்மை அதிகரிக்கிறது. டிராக்டர் மூலம் உழும்போது 5 கொத்து கலப்பை மூலம் உழுவது சிறப்பாக அமையும். இதனால் அடுத்த பருவத்துக்கு பயிர்சாகுபடி செய்வது எளிதாகிறது. நெல்அறுவடைக்கு பின் தேங்கியுள்ள தாள்களில் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்யும். கோடை

 

உழவு செய்வதால் பூச்சிகள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக உள்ளதால் மக்கி பயிருக்கு உரமாகிவிடுகிறது. எனவே கோடை மழையை பயன்படுத்தி நிலத்தை நன்கு உழவு செய்வதால் நில வளத்தை பெருக்கி பாதுகாக்க முடியும் என்று திருச்சி விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் அறிவழகன் கூறிஉள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.