பெண்ணிடம் ஏடிஎம் மூலம் பணம் எடுத்து தருதுபோல் நடித்து ரூ.28,500 அபேஸ்!

0 308
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பூசாரிகளத்தை சேர்ந்தவர் காமாட்சி (வயது 42). இவரது வீட்டில் கட்டுமான பணிகள் நடப்பதால் இரண்டு பவுன் தங்க நெக்லசை மணப்பாறையில் உள்ள ஒரு வங்கியில் அடமானம் வைத்துவிட்டு பின் அதற்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக கூறியதால் வங்கி

 

அருகே உள்ள ஏடிஎம் மையத்தில் பணம் எடுத்த போது பணம் வராததால் அருகிலிருந்த பெயர் விலாசம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து பணம் எடுத்துக் கொடுங்கள் என்று கூறியுள்ளார். அந்த அடையாளம் தெரியாத நபர் காமாட்சியிடம் ஏடிஎம் கார்டை மாற்றி கொடுத்து விட்டு காமாட்சியின் ஏடிஎம் கார்டை எடுத்து சென்று ரூ.9,500 வீதம் மூன்று முறை எடுத்து மொத்தம் 28,500 ரூபாய் திருடி சென்று விட்டார். இதுதொடர்பாக காமாட்சி அளித்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.