திருச்சி பாலக்கரை கீழப்புதூர் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் ஹேமலதா(19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த 9 மாதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் சம்பவத்தன்று ஹேமலதா தனது பழைய புத்தகங்களை கடையில் விற்று வருவதாக கூறிவிட்டு சென்றார்.
பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இவரது பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஹேமலதாவை தேடி வருகின்றனர்.