திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள பாதாள சாக்கடை பள்ளம்- மழைக்காலம் என்பதால் போர்க்கால நடவடிக்கையில் சீர்செய்ய மக்கள் கோரிக்கை
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. மத்திய பேருந்து நிலையம்,மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ரயில் நிலையம் உள்ளிட்ட பிரதான பகுதிகளுக்கு வர பயன்படுத்தப்படும் சாலையில் உள்ள பாதாள சாக்கடை பள்ளம் மூடி போட்டு முறையாக மூட படாததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

நாளொன்றுக்கு இந்த சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், முறையாக மூடப்படாத பள்ளத்தினால் தினமும் விபத்து ஏற்படுவதாக அப்பகுதி வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் இருந்த பள்ளம் தற்போது கிட்டத்தட்ட அரை அடி பள்ளமாக மாறி இருக்கிறது. அங்குள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த பள்ளத்தில் கற்களை கொண்டு மூடியும், கற்கள் மழை பெய்யும் பொழுது உள்ளே சென்று விடுவதால் , வாகனத்தின் டயர் கொண்டு மூடியுள்ளனர்.

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படும் நிலையில் பள்ளம் உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் விரைந்து சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றனர் வாகன ஓட்டிகள்.