தாய் திட்டியதால் ஆத்திரம்; சிறுமியுடன் மாயமான மகள் சென்னையில் மீட்பு!

0 283
Stalin trichy visit

திருச்சி கல்லுக்குழி ராமகிருஷ்ண நகர் பாண்டியன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் அகிலாண்டேஸ்வரி(வயது 35). இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர் 7ம் வகுப்பு முடித்து வீட்டில் இருந்து வருகிறார். இதில் தினமும் செல்போனில் கேம் விளையாடியும், பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனை தாய் கண்டித் துள்ளார். இதனால் தாயிடம் கோபித்துக்கொண்டு கடந்த 16ம் தேதி பக்கத்து வீட்டில் வசித்து வரும் 13 வயது சிறுமியை அழைத்துக்

கொண்டு மாயமானார். இருவரையும் காணாதது குறித்து அதிர்ச்சியடைந்த அகிலாண்டேஸ்வரி எங்கு தேடியும் இருவரையும் காணவில்லை. இதையடுத்து கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் அகிலாண்டேஸ்வரி புகார் அளித்தார். வழக்குப்பதிந்த இன்ஸ்பெக்டர் சேரன், இது குறித்து

அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்து தேடினார். இதில் வீட்டை விட்டு வெளியேறி மாயமான சிறுமிகள் இருவரும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் பஸ்சில் இருந்து இறங்கியபோது, அங்கிருந்த போலீசாரிடம் சிக்கினர். தொடர்ந்து திருச்சி போலீசாருக்கு தகவல் அளித்து இருவரையும் திருச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.