திருச்சி கலைஞர் நகர் பகுதியில் அமைந்துள்ள கொட்டப்பட்டு குளம் நிரம்பியதால் அதன் நீர் வெளியேற்றப் பாதையில் ஆக்கிரமிப்புகள் மற்றும் பராமரிப்பு இல்லாததால் ஜே.கே.நகரை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் இந்திராநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை அறிந்த உடன் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்து, நீர் வெளியேற்றப் பாதைகளை பராமரிக்க வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதை இன்று காலை மீண்டும் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் கரைகளை பலப்படுத்தி கால்வாய் அமைக்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அப்போது பொன்மலைக்கோட்ட துணைப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள், மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், கலைஞர் நகர் பகுதி பொறுப்பாளர் மணிவேல் மற்றும் பகுதி வட்டபொறுப்பாளர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.