“முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு ராஜ்யசபா சீட்” – எதிர்பார்ப்பில் கட்சியினர்!

0 1,006
Stalin trichy visit

தமிழகத்தில் ராஜ்யசபா தேர்தல் சூடு பிடித்துள்ளது. ராஜ்யசபா என்பது நாடாளுமன்றத்தில் இருக்கும் மாநிலங்களவையாகும். நாடு முழுவதும் காலியாக இருக்கும் 57 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் காலியாகின்றன.

தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா எம்பி பதவிக்கு வரும் ஜூன்யில் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத்தில் இருக்கும் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அடிப்படையில் அவற்றில், 4 எம்.பி பதவிகளை தி.மு.க-வும், 2 எம்.பி பதவிகளை அ.தி.மு.க-வும் கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் எனக் கூறப்படுகிறது…

இந்த ராஜ்யசபா எம்பி ரேஸ்சில் ஆளுங்கட்சியான தி.மு.க-வில் தற்போது ராஜ்ய சபா எம்.பி-யாக இருக்கும் டி.கே.எஸ்.இளங்கோவனின் பதவிக்காலம் முடிவடைகிறது. ஆனால், கட்சி மேலிடம் அவருக்கு இந்த முறை வாய்ப்பளிக்கவில்லை. அதே போல, மற்றுமொரு எம்.பி-யான ஆர்.எஸ்.பாரதிக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபத்தில் ராஜ்ய சபா எம்.பி-யாகப் பதவியேற்ற ராஜேஸ்குமாரின் பதவிக்காலமும் முடிகிறது. 6 மாதங்களே பதவியில் இருந்ததால், அவருக்கு மீண்டும் நீட்டிப்பு வழங்க முதல்வர் ஒப்புக்கொண்டுவிட்டார்.

இந்த நிலையில், தஞ்சை கல்யாணசுந்தரம், கேஆர்என் ராஜேஷ்குமார், ரா கிரிராஜன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னொரு எம்பி பதவி காங்கிரஸ் கட்சிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆளுங்கட்சியாக இருக்கும் திமுகவில் நான்கு எம்பி பதவிகள் இருந்தும் போட்டி குறைவாகத்தான் இருந்தது ஆனால் அதிமுக சார்பில் இரண்டு பதவிகள் இருந்தாலும் போட்டி கடுமையாக உள்ளது…

அதிமுகவிற்கு இருக்கும் 2 எம்பி வேட்பாளர்கள் யார் என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த நிலையில் கூட்டணிக் கட்சிகள் கூட அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் அதிமுகவின் எம்பி வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டே வருகிறது!

இந்த நிலையில் டெல்டா பகுதிகளான திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக திருச்சி மாவட்டம் முழுவதுமே திமுகவின் வசம் உள்ளது.
இந்த நிலையில் அதிமுக சார்பாக ஒதுக்கப்படும் 2 எம்பிக்களில் டெல்டா பகுதியான திருச்சியில் கொடுக்க வேண்டும் என்பதே கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.

திருச்சி மண்டலத்தை பொறுத்தவரை முத்தரையர் சமுதாய மக்கள் அதிகமாக இருக்கும் இப்பகுதியில், சுதந்திரம் கிடைப்பதற்கு பிறகும் கூட இதுவரை ஒரு எம்பி பதவி கூட இந்த சமுதாயத்தில் இருந்து அனுப்பவில்லை என்ற ஏக்கமும் ஆதங்கமும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் உள்ள 2 எம்பி பதவிகளில் முத்திரையர் சமுதாயத்திற்கு ஒதுக்கும் பட்சத்தில் மத்திய மண்டலமான திருச்சியில் அதிமுக மீண்டு எழுவதற்கும், வருகின்ற தேர்தல்களிலும் சாதகமாக அமையும் என்பதே முத்திரையர் சமுதாயத்தின் எண்ணமாகவும் அதனை சார்ந்தவர்களின் எண்ணமாகவும் இருந்து வருகிறது. இதனால்தான் அதிமுக சார்பில் இந்த அழுத்தத்தை கொடுத்து உள்ளனர்.

மேலும் அதிமுக பலமிழந்து காணப்படும் இந்த பகுதியிலிருந்து ஒரு எம்பி நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என்பதே கட்சியினரின் எண்ணமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது…

Leave A Reply

Your email address will not be published.