பாரபட்சமாக பழிவாங்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சாலை மறியல்

0 555
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஒன்றியப்பகுதி, முகவனூர் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் சில கிராம மக்களுக்கு பணியில் பாரபட்சம் செய்வதாகவும், சில கிலோ மீட்டர் கடந்து பணி செய்யும் வகையில் பணிகள் வழங்கி பாரபட்சமாக நடத்துவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் லெலினிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அருள் குணசேவியர் தலைமையில் தொழிலாளர்கள் பெரிய குளத்துப்பட்டியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் அங்கிருந்து வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு சென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரபட்சமாக பழிவாங்கும் நோக்கில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து தர்ணாவை கைவிட்டனர்.

Leave A Reply

Your email address will not be published.