வடமாநில தொழிலாளி வயிற்று வலியால் சாவா? போலீசார் விசாரணை

0 412
Stalin trichy visit

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம்சரணின் மகன் சூரத்குமார்(21). இவர் திருச்சி பெரியமிளகுபாறை பகுதியில் தங்கி இருந்து வீடுகளுக்கு டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்கள் பதிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக சூரத்குமார் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை அவருக்கு உடல்நிலை மோசமானதால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.