பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

0 441
Stalin trichy visit

திருச்சி கிராப்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் அரவிந்த்(43). இவர் டீசல் பம்ப் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுதா. இவர்களுடைய மகன் கீர்த்திவாசன்(14). திருச்சியில் கமலாநிகேதன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்திவாசன் வீடியோகேம் விளையாடுவதால் அதிக ஆர்வத்துடன் இருந்தார்.

இதனால் சரிவர சாப்பிடாமல் ஒருநாளைக்கு ஒருவேளை மட்டும் சாப்பிட்டு வந்துள்ளார். இதில் அவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில்  வீட்டின் அனைவரும் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது வீட்டில் படுத்து இருந்த கீர்த்திவாசனை காணாததால் அவரை தேடி பார்த்தனர்.

அப்போது அவர் ஹாலில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கினார். இதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். உடனடியாக இது குறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து அரவிந்த் தனது மகன் வயிற்றுவலி காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக அளித்த புகாரின்பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.