மு.க.ஸ்டாலின் படத்தை கையில் வைத்து கொண்டு அகதிகள் போராட்டம்

0 582
Stalin trichy visit

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, நைஜீரியா உள்பட பல நாடுகளை சேர்ந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய 116 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 30-க்கும் மேற்பட்ட அகதிகள் தங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மாதம் 11-ந் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

40-வது நாளாக அவர்களுடைய போராட்டம் தொடர்ந்தது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் படத்தை கையில் வைத்து கொண்டு, பொதுமன்னிப்பு வழங்கி அனைவரையும் சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள்.

Leave A Reply

Your email address will not be published.