மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

0 592
Stalin trichy visit

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருநெடுங்குளம் ஊராட்சி சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(வயது 40). இவர் நாதஸ்வரம் வாசிக்கும் தொழில் செய்து வருகிறார். மேலும் இவரது மனைவி புஷ்பவல்லி(32). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

இதில் அவரது மகன் கமலக்கண்ணன்(10) திருநெடுங்குளம் அரசு பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் தனது வீட்டின் அருகே உள்ள பெரியப்பா வீட்டில் யாரும் இல்லாததால் விளையாட சென்றபோது எலக்ட்ரிகல் பெட்டியில் உள்ள மின்சார கம்பி அச்சிறுவனின் மீது பட்டு, மின்சாரம் பாய்ந்து கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். இதுகுறித்து துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.