வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டி திருட்டு – போலீசில் புகார்

0 360
Stalin trichy visit

கூத்தூரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். போலீசில் நேற்று புகார்.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கூத்தூர் ஊராட்சியில் உள்ள காயத்ரி நகரில் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். காவல் நிலையத்தில் நேற்று புகார்.

சமயபுரம் அருகே கூத்தூர் காயத்திரி நகரை சேர்ந்தவர் நடேசன் மகன் 53 வயதான ரவி. இவர் வீட்டின் முன்பு தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு இரவு உறங்கச் சென்றார். அப்போது கடந்த 10ஆம் தேதி நள்ளிரவில் வீட்டுக்கு வந்த மர்ம நபர்கள் ஸ்கூட்டியை திருடிச் சென்றனர். காலையில் எழுந்து பார்த்தபோது ஸ்கூட்டியை காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த ரவி கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு போலீசார் ஸ்கூட்டியை திருடிச் சென்ற ஆசாமிகளை  தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.