சாக்கடை கழிவுகளை தொழிலாளர்கள் கைகளால் அள்ளும் அவலம்
திருச்சி, ஆக.2 மனிதன் மலத்தை கையால் அல்ல கூடாது என உச்ச நீதிமன்றமும் / உயர் நீதிமன்றங்களும் பல்வேறு தீர்ப்புகள் வழங்கியும் மலத்தை மனிதன் கையால் அகற்றுவது மனித உரிமைக்கு எதிரானது.

இந்நிலையில் நேற்று திருச்சி பெரியகடை வீதியில் இந்தியன் வங்கி அருகில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களின்றி தூய்மைப் பணியாளர்கள் சாக்கடை கழிவுகளை அள்ளும் பணியில் ஈடுபட்டனர். துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை கொடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசாணையும் 2013 மறுவாழ்வு சட்டமும் சொல்கிறது இருந்தும் இவர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் கொடுக்கப்படவில்லை. எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் தூய்மைப்பணியாளர்களை இப்பணியில் ஈடுபடுத்திய மாநகராட்சி ஒப்பந்ததாரர் திருச்சி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பணியில் ஈடுபட்ட பணியாளர்களுக்கு உரிய இழப்பீடை தமிழ்நாடு அரசு வழங்க திருச்சி மாவட்ட ஆட்சியர் வழிவகை செய்ய வேண்டும் என்று அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவனர், தலைவர் பொன் முருகேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.