சாஸ்திரி ரோடு சாலையோர உரை கிணறுக்கு விடிவுகாலம் பிறக்குமா?
திருச்சி தில்லைநகர் சாலை முழுவதும் மேற்கு புறத்தில் 100க்கும் மேற்பட்ட சாலையோர உரை கிணறுகள் மேல் மூடிபோடாமல், மண் மூடி, உடைந்து பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் பாதசாரிகள், கார் உள்ளிட்ட வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மாற்று திட்டமாக சாலையோர உரை கிணறுகளில் திருச்சி மாநகராட்சி சார்பில் மேற்படி சாலையில் கூண்டுடன் கூடிய செடி வைக்க திட்டம் வகுக்கப்பட்டது. மரமும் நடப்பட்டது வரவேற்க்கதக்க ஒன்று.

ஆனால் தற்பொழுது திருச்சி தில்லைநகரின் மற்றொரு போக்குவரத்து நெரிசல் பகுதியான சாஸ்திரி ரோட்டில் கிழக்கு பக்கத்தில் திருச்சி மாநகராட்சி சார்பில் பல இலட்ச ரூபாய் மக்கள் வரிபணத்தில் சாலையோர உரை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த உரை கிணறுகளுக்கும் மேல் மூடி கிடையாது. பல உரை கிணறுகள் சாலை மட்டத்திற்கு மண் சேர்ந்து உடைந்து சேதமாகியுள்ளது.
ஆனால் தில்லைநகர் சாலையோர உரை கிணறுகளில் கூண்டுடன் செடி வைத்து மாற்றியமைக்கப்பட்டது போன்று சாஸ்திரி ரோடு சாலையோர உரைகிணறுகள் மாற்றியமைக்கப்படவில்லை என்பது என்றும், எனவே திருச்சி மாநகராட்சி தில்லைநகர் மேற்கு புறத்தில் சாலையோர உரை கிணறு திட்டத்தை மாற்றி கூண்டுடன் கூடிய செடி நடபட்டதோ_அதே போன்று சாஸ்திரி ரோடு கிழக்கு புறத்திலுள்ள உரை கிணறுகளில் கூண்டுடன் கூடிய செடி நடவேண்டும் என மக்கள் நீதி மய்யம் சார்பில் திருச்சி மாநகராட்சி ஆணையர் அவர்களையும், திருச்சி மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஊராக உள்ளாட்சித்துறை அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய…https://chat.whatsapp.com/GHoBSZRd0IRL3LL0595Pg8