10 வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 12 வகுப்பு மாணவன் மீது போக்சோ வழக்கு

0 495
Stalin trichy visit

மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதே போல் மற்றொரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

சிறுவனின் அக்காவை சிறுமி வசிக்கும் ஊரில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இதனால் சிறுவன் அங்கு சென்று வந்த சூழ்நிலையில் சிறுமியிடம் நைசாக பேசி உல்லாசம் அனுபவித்ததாகவும், அதனால் சிறுமி கர்ப்பம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மணப்பாறை மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.