மணப்பாறையில் 10க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு
திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர்ப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடி கடைகள் வைப்பதற்கு நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக உரிமம் கேட்டு மணப்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார்கள். அந்த மனுவின் அடிப்படையில் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் சிந்து மற்றும் மணப்பாறை வட்டாட்சியர் சேக்கிழார் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் அரசின் விதிமுறையின்படி கடையின் உரிய அளவு உள்ளதா?, கடையில் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வைக்கப்பட்டு உள்ளார்களா?, மின்சாதனங்கள் முறை படுத்தி உரிய இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளார்களா?, அவசர கால நேரத்தில் வெளியேறிச் செல்ல வழிகள் உள்ளதா? என்று ஆய்வு செய்தார்கள். இந்த ஆய்வின் மணப்பாறை நகர் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகள் ஆய்வு செய்யப்பட்டது.