1-ந் தேதி முதல் புதுப்பொலிவுடன் மீண்டும் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடக்கம்

0 406
Stalin trichy visit

மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு தலைமை சித்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கொரோனா பரவல் தொற்று காரணமாக வர்மா, சுக பிரசவத்திற்கு மகப்பேறு சஞ்சீவி பெட்டகம் மற்றும் ஆட்டீஸம் சிறப்பு பிரிவுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

அங்கு மீண்டும் புதுப்பொலிவுடன் சிறப்பு சிகிச்சை பிரிவுகளான குழந்தையின்மை, சினைப்பை நீர்கட்டி, மூட்டு வலிகள், பஞ்ச கர்மா பிரிவுகள் தொடங்கப்பட உள்ளன. மேலும் ஒருங்கிணைந்த ஆயுஸ் மருத்துவ சிறப்பு கூட்டு சிகிச்சை பிரிவுகள் நவம்பர் 1-ந் தேதி முதல் செயல்பட தொடங்குகிறது.

யோகா வகுப்புகள் திங்கட்கிழமை முதல் சனிவரை காலை 9 மணி முதல் 10 மணிவரை நடக்கிறது. குழந்தையின்மை மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை பிரிவு ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், நரம்பு சம்பந்தப்பட்ட சிகிச்சை ஒவ்வொரு புதன்கிழமையும், எலும்பு மூட்டு வலி சம்பந்தப்பட்ட சிகிச்சை ஒவ்வொரு வியாழக்கிழமையும் காலை 8 மணி முதல் 12 மணிவரை, மாலை 3 மணி முதல் 5 மணிவரை செயல்படும். ஆயூஸ் கிளப் சிகிச்சை ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணிவரை செயல்படும்.

ஆட்டிசம் மற்றும் வர்ம சிகிச்சை பிரிவு ஒவ்வொரு புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் 12 மணிவரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணிவரையிலும் செயல்படும். பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு வெள்ளிக்கிழமை தோறும் காலை 8 மணி முதல் 12 மணிவரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணிவரை செயல்படும்.
இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.