வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட பைக் மாயம்

0 267
Stalin trichy visit

திருச்சி, நவ.19 திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சி, பழனியப்பா நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார்(47). இவர் தனது பைக்கை நேற்று முன்தினம் (நவ.17) இரவு 9 மணி அளவில் வீட்டின் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் 10 மணி அளவில் வந்து பார்த்தபோது பைக் மாயமாகி இருந்தது.இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த கொள்ளிடம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் பைக்கை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.