ஜனநாயகத்தை காப்பாற்றியவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது; ப.குமார் பேச்சு
தி.மு.க. அரசை கண்டித்து திருச்சி மாவட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருச்சி அண்ணா சிலை முன்பாக நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி பேசுகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜனநாயக கடமையை செய்தவர் அவரை கைது செய்திருக்கின்றனர். ரமேஷ் என்பவர் 30 வாக்குசாவடிக்கு சென்று கள்ள ஓட்டு போட்டுள்ளார். அவரை ஜெயக்குமார் அவர்கள் அழைத்து சென்று காவல்துறைக்கு கொண்டு செல்கிறார். இது எப்படி தவறாகும் என்றார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ப.குமார் பேசுகையில், ஸ்டாலின் அவர்களே அடுத்த 4 ஆண்டில் இதே காவல் துறையை வைத்து உங்கள் தந்தையை கைது செய்தது போல் கதற கதற உங்களை கைது செய்வோம். காலம் வரும். மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு இதுவரை ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கப்படவில்லை. இதற்கு காரணம் ஸ்டாலின் தான், அவரின் வாய் கொழுப்பு தான் காரணம். திமுகவிற்கு நாட்கள் எண்ணப்பட்டு வருகிறது. ஜனநாயகத்தை காப்பாற்றியவர் மீது பழிவாங்கும்
நோக்கில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தது முதல் தேர்தல் முடியும் வரை நாடகம் நடத்தியிருக்கிறார்கள். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. வரும் காலம் அதிமுக காலம் என்றார்.