வாக்கு சேகரிப்பில் காலை முதல் தீவிரம் காட்டும் தி.மு.க. வேட்பாளர் மதிவாணன்!

0 409
Stalin trichy visit

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. திருச்சி மாநகராட்சி 16வது வார்டு வேட்பாளர் மதிவாணன் வேட்பு மனு தாக்கல் செய்ததில் இருந்து தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை முதல் அவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்தித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவர் தான் வெற்றிபெற்றால் செய்யவுள்ள திட்டங்கள் குறித்து பிரச்சாரம் செய்தார். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.