அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும்; வேட்பாளர் மணிமேகலை வாக்குறுதி!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. கடைசி நாளான இன்று தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் திருச்சி மாநகராட்சி 13வது வார்டு திமுக வேட்பாளர் மணிமேகலை ராஜபாண்டி எஸ்.ஆர்.சி.ரோடு பகுதிகளில் மேளதாளங்கள் முழங்க அனல் பறக்கும் பிரச்சாரம் செய்தார்.

பிரச்சாரத்தின்போது, அனைத்து பகுதிக்கும் குடிநீர் வசதி, சாலை வசதி சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, மின் விளக்கு வசதி மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்து தரப்படும் என வாக்குறுதி அளித்து உதய சூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். வாக்கு சேகரிப்பின்போது வேட்பாளர் மணிமேகலை ராஜபாண்டியை ஆதரித்து, ஆரத்தி எடுத்து நெற்றில் திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் உடன் சென்று பொதுமக்களிடம் தி.மு.க. அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர்.