இறுதி கட்ட பிரச்சாரம் ஓய்ந்தது; வாக்களிக்க காத்திருக்கும் பொதுமக்கள்… பீதியில் வேட்பாளர்கள்!

0 331
Stalin trichy visit

நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகளுக்கு 589 பேர் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டது. இதில் குறைந்தபட்சமாக 1, 3, 9, 32, 44, 50 ஆகிய வார்டுகளில் தலா 5 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக 47 மற்றும் 54வது வார்டில் தலா 18 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி நடந்த வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரம், நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

நேற்று தேர்தல் பிரசாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதன்படி தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி, தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், பா.ம.க. கட்சியை சேர்ந்தவர்கள் தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் நடந்து சென்றும், பிரசார வாகனத்தில் சென்றும், இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றும் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

திருச்சி மாநகராட்சியை பொறுத்தவரை 65 வார்டுகளில் மொத்தம் 7,79,658 வாக்காளர்கள் உள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலை சிறப்பாக நடத்திட ஒரு தேர்தல் நடத்தும் அலுவலர் (கமிஷனர்) தலைமையில் கோட்டத்திற்கு 2 பேர் என 4 கோட்டத்திற்கு 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 859 வாக்குச்சாவடிகள் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணியில் ஈடுபட வாக்குப்பதிவு அலுவலர் நிலை 1 முதல் 4 வரையிலான அலுவலர்கள் என மொத் தம் 4,128 வாக்குபதிவு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி கோ.அபி சேகபுரம் கோட்டத்தில் 1,028 பேரும், பொன்மலை கோட்டத்தில் 1,068 பேரும், அரியமங்கலம் கோட்டத்தில் 1,052 பேரும், ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 980 பேர் என மொத்தம் 4,128 வாக்குப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். மேலும் வாக்காளர்கள் எளிமையாக வாக்களிக்க வீடு தேடிச்சென்று பூத்சி லிப் வழங்கும் பணி கடந்த 12ம் தேதி முதல் தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்பார்வையில் 745 பேர் ஈடுபட்டனர்.

நாளை 19ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெ றும். மாலை 5 முதல் 6 மணி வரை கொரோனா உள்ளவர்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முன்னதாக வாக்குபதி வுக்கு முன்பு வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் காலை 6 மணி 7 மணி வரை மாதிரி வாக்குபதிவு நடத்தப்பட்டு வாக்குபதிவு இயந்திரங்கள் தயார்நிலையில் வைக்கப்படுகிறது.
மேலும் வாக்குபதிவு முடிந்தவுடன் வாக்குபதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்ல ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட, வாகனங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 22ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து மார்ச் 4ம் தேதி மேயர் தேர்வு நடக்க உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.