வீட்டின் பூட்டை உடைத்து 70 சவரன் நகை, ரூ.2 லட்சம் ரொக்கம் கொள்ளை

திருச்சி, மே 26 திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கருமலையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரராஜ பெருமாள் (54). எலக்ட்ரிக்கல்ஸ் கடை வைத்துள்ளார். இவர் நேற்று தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவி மற்றும் மகனுடன் மைசூருக்கு சுற்றுலா சென்றுள்ளார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 70 சவரன் நகை மற்றும் ரூ. 2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த புத்தாநத்தம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.