திருவெறும்பூர் குண்டூர் விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா !
திருவெறும்பூர் அருகே குண்டூர் அய்யம்பட்டியில் உள்ள விநாயகர் கோவில் செல்லாயி அம்மன்சப்பாணி கருப்பு கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் குண்டூர் அய்யம்பட்டி கிராமத்தில் விநாயகர், செல்லாயி அம்மன், சப்பாணி கருப்பு கோயில் உள்ளது. இந்தக் கோவிலில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த திங்கள் கிழமை காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்வுகள் யாக சாலையில் இருந்து கடம் எடுத்து வரப்பட்டு கோயிலை சுற்றிவந்து, மூலவரின் விமான கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஏற்பட்டது.
எடுத்து ஏனைய பரிவார கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. சிறப்பு அலங்காரமும் மகா தீபாரதனை நடைபெற்றது.
திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.