“ஊத்துங்க தலைவா ஊத்துங்க” என தற்கொலைக்கு தூண்டிய வீடியோவால் திருச்சியில் பரபரப்பு.

0 400
Stalin trichy visit

பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து திருச்சி ஐஜி அலுவலகம் முன்பு முதியவர் தற்கொலை முயற்சி. பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ செட்டியார்(71).இவருக்கு சரவண குமார் என்ற மகன் உள்ளார். இவர் கடந்த வருடம் இறந்துவிட்டார்.

இந்நிலையில் ராஜூ செட்டியார் திருச்சி மத்திய மண்டல காவல் துறை அலுவலகத்தின் வாசலில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அருகில் இருந்த காவலர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவரது புகார்களை பெற்று விசாரணை நடத்தினார். அதில் கூறியதாவது,

நானும் எனது மகனும் பெரம்பலூர் டவுன் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சின்னமணி நாடார் என்பவரது மகன் சரவணன் என்பவரிடம் எங்களது 88 சென்ட் நிலத்தை அடகு வைத்து 20 லட்ச ரூபாய் பெற்றிருந்தோம்.

கடந்த 03.10.2008 -ஆம் ஆண்டு நானும் எனது மகனும் அசல் மற்றும் வட்டியை சேர்த்து 28 லட்ச ரூபாயை திருப்பி கொடுத்துவிட்டோம்.பின்னர் 2019-ம் ஆண்டு எனது மகன் இறந்து விட்டதால் எனது நிலத்தை எனக்கு திரும்பவும் எழுதி கொடுக்காமல் ஏமாற்றி வருகின்றனர்.

இதுதொடர்பாக பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பாளரும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர்கள் மீது நடவடிக்கை‌ எடுக்க வேண்டுமென எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் தற்கொலைக்கு திட்டமிட்டு தூண்டியதாக ஒரு வீடியோ வலம்வந்து கொண்டிருக்கிறது.

அதில் “தலைவா ஊத்துங்க,தலைவா அங்கு சென்று ஊத்துங்க” என அந்த வீடியோவில் ஆடியோ வலம் வந்து கொண்டிருக்கிறது.இது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.