திருச்சி அருகே வனப்பகுதியில் சிறுத்தை தாக்கி இருவர் படுகாயம்!

0 977
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சிறுத்தை தாக்கியதில் இருவர் படுகாயமடைந்தனர். இதன் மூலம் திருச்சி மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது முதன்முறையாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆங்கியம் கிராமம்,இந்த கிராமத்தின் கடைசிப் பகுதியில் ஆங்கியம் கரடு என அழைக்கப்படும் காட்டுப் பகுதி உள்ளது.இந்த பகுதிகளில் வன விலங்குகளான சிறுத்தை, கரடி உள்ளிட்ட விலங்குகள் சுற்றி திரிவதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஹரி பாஸ்கரன் என்பவர் காட்டு பகுதியில் செல்பி எடுப்பதற்காக சென்றுள்ளார் குகையின் முன்பு நின்று செல்பி எடுக்கும் பொழுது எதிர்பாராதவிதமாக குகைக்குள் இருந்த சிறுத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைக் கண்ட விவசாயி துரைசாமி என்பவர், ஹரிபாஸ்கரை காப்பாற்ற முயன்ற போது,அவரையும் சிறுத்தை தாக்கிவிட்டு தப்பியோடியது,இதில் படு காயமடைந்த ஹரி பாஸ்கரன் மற்றும் விவசாயி துரைசாமி ஆகிய இருவரையும் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு , சிகிச்சைக்காக தாத்தையங்கார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய… https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.