ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி இரண்டாம் நாள் நிகழ்ச்சி

0 264
Stalin trichy visit

திருச்சி, டிச. 14  அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் ஶ்ரீரங்கம் நம்பெருமாள் பகல் பத்து திருமொழித்திருநாள் இரண்டாம் திருநாள்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயிலில் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா திருநெடுந்தாண்டகம் என்றழைக்கப்படும் விழாவுடன் தொடங்கியது.

இந்நிலையிப் பகல் பத்து வைபவத்தின் இரண்டாம் நாளான இன்று நம்பெருமாள் காலை 7.00 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து திருநாரணன் முடி (அ) முத்தரசன் கொரடு அணிந்து சிகப்பு கல் அபய ஹஸ்தம்,மகர கர்ண பத்திரம்,அண்டபேரண்ட பக்ஷி பதக்கம், வெள்ளைக்கல் ரங்கூன் அட்டிகை, வெள்ளைக்கல் சின்ன வில்வ பத்திரபதக்கம், நெல்லிக்காய் மாலை,காசு மாலை
அடுக்கு பதக்கங்கள் அணிந்து ; பின் சேவையாக – புஜ கீர்த்தி; சிகப்புக்கல் தாமரை பதக்கம் அணிந்து; வெண்பட்டு உடுத்தி எழில் மிகு திருக்கோலத்தில் புறப்பட்ட நம்பெருமாள் ராஜ நடைப்போடு வலம் வந்து சரியாக7.30 மணிக்கு அர்ச்சுன மண்டபத்தை வந்தடைந்தார்.

நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் மாலை வரை பக்தர்களுக்கு சேவை சாதிப்பார் – பின்னர் இரவு 9 மணிக்கு அங்கிருந்து புறப்படும் நம்பெருமாள் இரவு 10 மணிக்கு மூலஸ்தானம் சேர்கிறார்.

வைகுண்ட ஏகாதேசி பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் வருகின்ற 22ஆம் தேதியும் – வைகுண்ட ஏகாதேசி சொர்க்கவாசல் திறப்பு வருகின்ற 23ஆம் தேதி சனிக்கிழமையும் நடைபெற உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.