விஜய்க்கு எதுவுமே தெரியாது – திருச்சியில் மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் வேதனை!

0 823
Stalin trichy visit

திருச்சி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற மூத்த நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்டத் தலைமை தளபதி விஜய் ரசிகர் மாவட்ட , ஒன்றிய நிர்வாகிகள் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்தனர்

அப்போது பேசிய தொட்டியம் பகுதி முன்னாள் விஜய் ரசிகர் மன்ற செயலாளர் பாரதிராஜா கூறுகையில்…. “கடந்த பல ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் தலைமை நிர்வாகிகளாகவும், ஒன்றிய, நகர பகுதிகளை மன்ற நிர்வாகிகளும் செயல்பட்டு வந்தாகவும், தற்போது தங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பெயரில் ரசிகனாகவும், கிளை இயக்க பதிவு எண் கொண்டு நலத்திட்ட பணிகளை செய்யக்கூடாது எனவும், தொடர்ந்து நலத்திட்ட பணிகள் செய்துதால் மிரட்டி வருவதாகவும் தெரிவித்தனர்.

 

கடந்த 5 ஆண்டுகளாக விஜய் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாததற்கு காரணம் விஜய் ரசிகர் மன்ற மாநில பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தான் என்றும், மூத்த நிர்வாகிகள் எந்த ஒரு நல திட்டமும் செய்ய விடாமல் தடுக்கிறார். தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரியிலும் இது தொடர்பான பிரச்சினை நிலவி வருகிறது. கடைக்கோடியில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் ரசிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விஜய் பெயரை பயன்படுத்தக்கூடாது என பலர் மிரட்டுவதாகவும், பெயர் சூட்டாத அரசியல் கட்சி தான் விஜய் மக்கள் கட்சி என்றும்,

 

செய்தியாளர் சந்திப்பில் ஈடுபட்ட பிறகு எங்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு காரணமும் தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தூண்டுதலின் பேரில் தான் நடக்கும். வருகின்ற 23ம் தேதி திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் புஸ்லி ஆனந்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்ட உள்ளதாகவும், பல்வேறு பிசி ஷெட்யூலில் இருக்கும் விஜய்க்கு இது குறித்த எதுவும் தெரியாது. எனவே செய்தியை பார்க்கும் விஜய் அண்ணா நடைபெறும் பிரச்சினைகள் குறித்து உரிய விசாரணை எடுக்க வேண்டுமென” கோரிக்கை முன்வைத்தனர்.

திருச்சி மெயில் செய்திகளை உடனுக்குடன் அறிய….https://chat.whatsapp.com/ElwJ6Sxx3w58HlHTxk97fo

Leave A Reply

Your email address will not be published.