திருச்சி மாவட்டத்தை பெறுத்தவரை திருச்சி மாநகராட்சி, மணப்பாறை, துறையூர், துவாக்குடி, லால்குடி, முசிறி என 5 நகராட்சிகள், பாலகிருஷ்ணம்பட்டி, கல்லக்குடி
காட்டுப்புத்தூர், கூத்தப்பர், மண்ணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், பொன்னம்ப்பட்டி, புள்ளம்பாடி, பூவாளூர், எஸ்.கண்ணணூர், சிறுகனூர், தாத்தையங்கார்ப்பேட்டை, தொட்டியம், உப்பிலியாபுரம் என 14 பேரூராட்சிகள் உள்ளன.

இதற்கான வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இதில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். இதில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு காஜாமலை சந்திரா மானிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவயில் வாக்களித்து ஜனநாயக கடமையாற்றினார். தொடர்ந்து துவரங்குறிச்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடியில் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.