இலங்கை தமிழர்களுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர்கள் வழங்கினர்
திருச்சி கொட்டப்பட்டு இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 469 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு பாத்திரம், துணிமணிகள் மற்றும் இலவச எரிவாயு இணைப்பு ஆகிய நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், எம்.பழனியாண்டி, சீ.கதிரவன் மற்றும் பலர் உள்ளனர்.
