அன்பில் அறக்கட்டளை சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

0 297
Stalin trichy visit

திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், பள்ளி கல்வி துறை அமைச்சர் மற்றும் அன்பில் அறக்கட்டளையின் நிறுவனருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி நடத்திய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாமில் 10 கம்பெனிகள் பங்கு பெற்றன. இந்த முகாமில் 200 பேருக்கும் மேற்பட்டவர்கள் பங்குபெற்றனர். இவர்களுக்கு முதற்கட்ட தேர்வு முடிவு பெற்ற நிலையில் 65 பேருக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.


அடுத்து வரும் நாட்களில் நேர்முக தேர்வுகளை முடித்து பணியில் சேர்வதற்கான வாய்ப்பை பல்வேறு நிறுவனங்கள் செய்துள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமை அன்பில் அறக்கட்டளை இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன். என்.கோவிந்தராஜன் பகுதி கழக செயலாளர் நீலமேகம், இ.எம்.தர்மராஜ், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.எஸ்.எம்.கருணாநிதி, எம்.மாரியப்பன், மற்றும் வேலைவாய்ப்பு முகாம் ஒருங்கிணைப்பாளர் ராகவன் ராமு ஆகியோர் இணைந்து நடத்தினர்.

Leave A Reply

Your email address will not be published.