பஸ் நிறுத்தத்தில் ஆண் குழந்தையை வீசிசென்ற தாய் யார்? போலீசார் விசாரணை

0 519
Stalin trichy visit

திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள வண்ணாங்கோவில் பகுதியில் ஏராளமான தனியார் நிறுவன குடோன்கள் உள்ளன. அவற்றுக்கு வெளிமாநிலங் களிலிருந்து சரக்கு ஏற்றிக் கொண்டு தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் வருவது வழக்கம். டிரைவர்கள் சிலர், அங்கு லாரிகளை நிறுத்தி விட்டு ஓய்வெடுப்பதும் வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு ஒரு லாரி வந்தது. வண்ணாங்கோவில் பஸ் நிறுத்தம் அருகே டிரைவர், லாரியில் இருந்த லோடுகளை இறக்கி விட்டு நள்ளிரவு புறப்பட்டார்.

அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே டிரைவர் இறங்கி சென்று பார்த்தபோது அங்கு கட்டபையில் பிறந்து 10 நாட்களே ஆன ஆண் சிசு கிடந்தது. உடனே அவர் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்தார். இதையடுத்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கார்த்திகேயன், மருத்துவ டெக்னீசியன் விஜி ஆகியோர் குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, பின்னர் திருச்சி அரசு மருத் துவமனையில் சேர்த்தனர்..பின்னர் குழந்தையை டீன் வனிதா தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைத்தார்.

கள்ளக்காதலில் பிறந்த குழந்தை என்பதால் அதன் தாய் குழந்தையை வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்கு பதிந்து பச்சிளங் குழந்தையை கட்ட பையில் வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.