திருச்சியில் பிரபல நகைக்கடை ஊழியரை கொன்று புதைத்த குற்றவாளிகள் 7 பேர் கைது : 1 கிலோ நகைகள் மீட்பு காவல்துறை நடவடிக்கை
திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரணவ் நகைக் கடையில் உறையூர் புத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் மார்டீன் ஜெயராஜ் (42) என்பவர் நகைகளை கொள்முதல் செய்பவாக பணியாற்றி வந்துள்ளார். கடந்த 8 ம் தேதி காலை 1 கிலோ 500 கிராம் நகைகளை சென்னையில் உள்ள சௌகார்பேட்டை பகுதியில் நகைகளை வாங்க ஏற்கெனவே இதே நகைக் கடையில் பணியாற்றிய ஸ்ரீரங்கம் மாம்பலச்சாலை பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் பிரசாந்த (26) கிழக்குறிச்சியைச் சேர்ந்த பிரசாந்த் காரில் சென்னைச் சென்று நகைகளை கொள்முதல் செய்து அன்று இரவு திருச்சி திரும்பினர். கார் தொழுதூர் அருகே வந்த போது, பிரசாந்த் சதித் திட்டத்தின் கீழ் பிரசாந்த நண்பர் மண்ணச்சநல்லூர் அருகே அழகியமணவாளத்தைச் பிரவின்ராஜ்(21) மற்றும் அரவிந்த.செல்வக்குமார்,விக்ரம்,அறிவழகன் கொண்ட கும்பல் காரில் வந்து, மார்டீன்ஜெயராஜை கொலை செய்தனர். மார்டீன் ஜெயராஜ் வைத்திருந்த 1 கிலோ 500 கிராம் நகைகளையும், அவர் வந்த காரையும் கைப்பற்றி மார்டீன் உடலைதிருச்சி மண்ணச்சநல்லூர் அருகே அழகிய மணவாளம் கிராமத்தில் உள்ள திடலில் புதைத்து விட்டு அனைவரும் தலைமறைவாக இருந்தனர். நகைக் கடை ஊழியர் மாயமானத் தொடர்ந்த கடையின் உரிமையாளர் செல்வராஜ் மகன் மதன் (42) உறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கார் ஓட்டுநர் பிரசாந்த்தின் செல்போன் டவர் மூலம் அறிந்து பிரசாந்த் யை கைது செய்து போலீசார் விசாரணை செய்த போது, பிரசாந்த்(26) ஏற்கெனவே பிரணவ் நகை கடையில் வேலை செய்த போது நல்ல வருவாய் கிடைத்ததாகவும், இதன் மூலம் இரண்டிற்கும் மேற்பட்ட கார்கள் வாங்கி டிராவல்ஸ் நடத்தி வந்ததாகவும், இதில் போதிய வருவாய் இல்லாததால் அதிகளவில் கடன் ஏற்பட்டதாகவும், மீண்டும் நகைக் கடையில் வேலைக்கு சேர முயன்ற போது அதற்கு தடையாக மார்ட்டீன் ஜெயராஜ் மீது கோபம் ஏற்பட்டதால் நண்பர் உதவியுடன் கொலை செய்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து மாம்பலசாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த வீட்டில் இருந்த 1 கிலோ 300 கிராம் நகையினை போலீசார் பறிமுதல் செய்தனர். கொலைக்கு மூளையாக செயல்பட்ட, மாம்பலச்சாலை பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் இவரது நண்பர் கல்க்கண்டார்கோட்டை அருகே கிழகுறிச்சி பகுதியைச் சேர்ந்த பொன்னார் மகன் பிரசாந்த ஆகிய இருவரையும் கைது செய்து நகைகடை ஊழியர் உடலை புதைத்து வைத்திருந்த உடலை தோண்ட உறையூர் மற்றும் மண்ணச்சநல்லூர் போலீசார் மற்றும் மண்ணச்சநல்லூர் வருவாய் வட்டாச்சியர் மலர் தலைமையில் புதைத்து வைத்திருந்த சடலத்தினை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனை சட்டம் மற்றும் தடவியல் மருத்துவர் செல்வக்குமார் தலைமையில் 3 மருத்துவர்கள் சம்பவ இடத்திலேயே உடற்கூறு ஆய்வு செய்தனர். பின்னர் உடற்கூறு ஆய்வு முடிந்த பிறகு உடலை மார்ட்டின் ஜெயராஜ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.