பணம் பட்டுவாடா தொடர்பாக 17 வழக்கு; கலெக்டர் தகவல்!
திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சிவராசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு நடந்துள்ளது. பணம், பரிசு பொருட்கள், தேர்தல் விதிமீறல்கள் என 17 வழக்குகள் பதிவாகி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.