திருச்சி ரயில் நிலையத்தில் 5 சிறுவர்கள் மீட்பு!

0 323
Stalin trichy visit

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஹவுராவில் இருந்து திருச்சி வந்த ரயிலில் சோதனை மேற்கொண்டபோது, சந்தேகப்படும் வகையில் 16 வயதுடைய 2 சிறுவர்கள், 15 வயது சிறுவன் ஒருவர், 14 வயது சிறுவர் ஒருவன், 17 வயது சிறுவன் மொத்தம் 5 சிறுவர்கள், ஒரு பெட்டியில் உட்கார்ந்து இருந்தனர்.

உடனே அவர்கள் 5 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது, அவர்களில் 4 பேர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்காக ரயிலில் புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 5 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்த ரயில்வே பாதுகாப்பு படையினர், 5 சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.