லாரியில் மணல் கடத்திய 2 பேர் கைது

0 372
Stalin trichy visit

சமயபுரம் போலீசார் சம்பவத்தன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்தனர். அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, லாரியை ஓட்டி வந்த ஸ்ரீரங்கம் சந்திரா நகரைச் சேர்ந்த ராஜரத்தினம் மகன் கணேஷ் (29), கம்பரசம்பேட்டை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த இக்பால் என்பவர் மகன் முகம்மது இப்ராகிம் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார் மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரையும் போலீசார் திருச்சி ஜே.எம் 3 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்படி துறையூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.