திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் மோர்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல்(வயது 54). இவர் கடந்த 2015ம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பைக்கில் வந்தார். போலீசார் வாகனசோதனை செய்தபோது சக்திவேலிடம் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 316 இருந்தன. விசாரணையில் கலர் ஜெராக்ஸ் எடுத்து கள்ளநோட்டாக மாற்றி புழக்கத்தில் விட்டது தெரிந்தது.
திருச்சி மாவட்ட கள்ளநோட்டு தடுப்பு பிரிவு போலீசார் கள்ளநோட்டை பறிமுதல் செய்து சக்திவேலை கைது செய்தனர். இந்த வழக்கு திருச்சி மாவட்ட 2வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயக்குமார், சக்திவேலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.