திருச்சி எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்தவர் புகழேந்திரன்(வயது 57). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு மேரி என்ற பெண்ணை திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக புகழேந்திரன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
அப்போது அவரை உறவினர் சரோஜா(வயது 55) என்பவர் பார்த்து விட்டு வந்தார். இந்நிலையில் புகழேந்திரன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கினார். தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் போலீசார் புகழேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சரோஜா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, புகழேந்திரன் தற்கொலை செய்து கெண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.