தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியாற்றி வந்த மாவட்ட பதிவாளர்கள் மற்றும் அதனையொத்த பணிகளில் பணிபுரிந்து வந்த 26 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்ட பதிவாளர்(தணிக்கை) முரளி திருச்சி எண்-3 இணை சார்பதிவாளராகவும், திருச்சி எண்-3 இணை சார் பதிவாளராக இருந்த அஞ்சனகுமார் விருதுநகர் மாவட்ட பதிவாளராகவும்(தணிக்கை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்ட பதிவாளர்(தணிக்கை) சங்கர் கோவை எண்-2 இணை சார்பதிவாளராகவும், கோவை எண்-2 இணை சார் பதிவாளர் கார்த்திகேயன் திருச்சி மாவட்ட பதிவாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலாசாமி பிறப்பித்துள்ளார்.