திருச்சி தெற்கு மாவட்டம் சுதந்திர போராட்ட தியாகி ஒண்டிவீரரின் 250வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட கழக அலுவலகத்தில் அவரின் திருவுருவப் படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், வண்ணை அரங்கநாதன், மதிவாணன் , கே.எஸ்.எம்.கருணாநிதி, செந்தில், மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் நிர்வாகிகள் மற்றும் அணிகளின் அமைப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.