திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக தொட்டியம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொட்டியம், வாணப்பட்டறை மற்றும் பவளக்கடைவீதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக சரத்குமார், மணி, குமார் ஆகிய 3 பேரையும் தொட்டியம் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த வெளிமாநில லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.