கடையின் பூட்டை உடைத்து திருடிய 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
திருச்சி வரகனேரி நாயக்கர் தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது 30). இவர் நாயக்கர் தெருவில் விறகுகரி கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று இரவு 11 மணி அளவில் கடையை பூட்டிவிட்டு அவர் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் கடையின் உள்ளே இருந்த ரூ.600 திருட்டு போயிருந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பீட்டர் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கடையில் திருடியது சந்தானபுரத்தை சேர்ந்த சாகுல்அமீதுவின் மகன் இம்ரான்கான் (19) மற்றும் வரகனேரியை சேர்ந்த 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இம்ரான்கானை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், 2 சிறுவர்களையும் கைது செய்து சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.